


SKM தங்கராஜ் (எ) S.K.மெய்ஞானமூர்த்தி
உடுமலைப்பேட்டை (udumalaipettai) தொகுதியில் உளமாரச் செயல்படும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அயராத அரசியல் உழைப்பாளி
- என்னுடைய இளமைப் பருவத்தில் இருந்தே ஈடு இணையற்ற ஈடுபாட்டுடன் செயற்பட்டு அரசியலின் மீது அதீத ஆர்வம் காட்டிய SKM தங்கராஜ் (எ) S.K.மெய்ஞானமூர்த்தி ஆகிய நான் 2008-ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கிட்டத்தட்ட 17-க்கும் மேற்பட்ட ஆண்டுகளைக் கடந்து சீரிய முறையில் எனது பணியைச் செய்து வருகிறேன்.
- தொகுதி மக்களின் தேவையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் முன்னெடுப்புகளை எடு்ப்பதன் மூலம் இத்தொகுதி இளைஞர் பட்டாளத்தின் எழுச்சி வீரராகத் திகழ்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
- கல்வி, ஆரோக்கியம், சமூகம் சார்ந்த சிக்கல்கள், மக்கள் நலத்திட்ட செயல்பாடுகள், தாய்மொழிப்பற்று என பல்வேறு களங்களில் கால்த் தடம் பதித்து வருகிறேன்! மக்களின் நலனுக்கான அனைத்து வகையான விசயங்களையும் அலசி ஆராய்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்வதையே எனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.
- அலாதி அனுபவம்; அளப்பரிய ஆர்வம்; தனித்துவமான சிந்தனை; இவை மூன்றிலும் கை தேர்ந்து உடுமலைத் தொகுதியில் என் மூலம் உருவாக்கப்பட்ட மாற்றங்கள் ஏராளம். அரசியலின் ஆழமும் மக்களின் சூழலும் உணர்ந்து இவை இரண்டிற்கும் பாலமாகச் செயல்படும் பாராட்டுதலுக்குரிய பாட்டாளியாக இருப்பதில் எனக்கு அலாதி ஆர்வம்.
கழகத்தின் வளர்ச்சி! மக்களின் மகிழ்ச்சி! இதை அடையும் வரை எனக்கில்லை தளர்ச்சி!
சாதனைகள்
மாநிலங்களின் உரிமைக்கான உறுதியான குரலாகத் 'திராவிட மாடல்' இன்று இந்தியா முழுவதும் ஒலிக்கிறது. எங்கள் முக்கிய சாதனைகளில் சில இங்கே.
Playlist
2:19
1:57
17:42
8:05
2:28
11:54
தமிழ் மொழிக் குடும்பத்தையும் அந்த மொழிகளைப் பேசும் மக்கள் இனத்தையும், அவர்கள் வாழும் நிலத்தையும் குறிக்கும் பழைமையான சொல்லே திராவிடம். உலகின் மூத்த மொழியான தமிழும், அதன் வழி உருவான திராவிட இனமும் காலப் போக்கில் பல்வேறு பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு உள்ளாகி, உரிமைகளைப் பறிகொடுத்தது. சமுதாயத்தில் உள்ள படிநிலை ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, அனைத்து மக்களுக்குமான சமத்துவத்தை வலியுறுத்தும் திராவிடச் சிந்தனை, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரசியல் இயக்கமாக உருவெடுத்தது. சமத்துவத்தை அடைவதற்கும், ஏற்றத்தாழ்வைத் தகர்ப்பதற்கும் சமூக நீதி என்ற இலட்சியம் முன்னெடுக்கப்பட்டது.
திராவிட இனத்தின் உரிமைக்கானப் போராட்டத்தில் நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை சமூக நீதிக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தன. திராவிட இனத்தின் உரிமைக்கானப் போராட்டத்தில் நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை சமூக நீதிக் கொள்கைகளை உயர்த்திப் பிடித்தன. இந்தியாவில் வேறெந்த மாநிலமும் அடைய முடியாத சமுதாய மறுமலர்ச்சியை அடைந்து முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது தமிழ்நாடு.
தந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்தியல்களும், பேரறிஞர் அண்ணாவின் ஜனநாயக நெறிமுறையும், கலைஞரின் ஆட்சித் திறனும் திராவிட மாடலின் வெளிப்பாடுகளாக நிலைபெற்று உள்ளது. சாதி, மதம், இனம், நிறம், நிலம், மொழி, பாலினம் உள்ளிட்டவற்றின் மீதான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக உள்ள அடிப்படை மனித உரிமை சமத்துவத்தை பறை சாற்றுவதே திராவிட மாடல் கோட்பாடாக திகழ்கிறது.
எங்கள் ஆவணப்படம்
கழகம்
கோடி கழக உறுப்பினர்கள்
சார்பு
அணிகள்
சட்டமன்ற
உறுப்பினர்கள்
மக்களவை உறுப்பினர்கள்
மாநிலங்களவை உறுப்பினர்கள்
இணையுங்கள்
வளமான தமிழ்நாட்டை உருவாக்கும் உறுப்பினராக சேர பதிவு செய்யவும். அனைவரும் இணைந்து சமூக மாற்றத்தை ஏற்படுத்துவோம்.


